Tamil Swiss News

13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டுவரும் 13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்கள், தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், சுதந்திரத்திற்காக மட்டுமே போராடி வருவதாகவும் முழக்கமிட்டுள்ளனர்.

தமிழ் ஆதரவாளர்கள் பயங்கரவாதிகள் அல்ல என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகள் மற்றும் கொடிகளுடன் Piazza Governo பகுதியில் குவிந்திருந்தனர்.

இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் ஒருபோதும் மாநில சட்டத்திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது நாட்டில் நடப்பவை எதும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 13 தமிழர்கள் மீது ஃபெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சூரிச், பெர்ன், சோலோதுர்ன் உள்ளிட்ட சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோர் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விடுதலைப் புலிகளின் கொடிகளையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது புகைப்படத்தையும் ஏந்தியிருந்ததுடன், குறித்த 13 பேருக்கு ஆதரவாக குரல்கொடுத்திருந்தனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் பலவும் முக்கியத்தும் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.