Tamil Swiss News

அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ள நாடக சுவிட்சர்லாந்து

அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ள நாடக சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் சராசரியாக நபர் ஒருவர் ஓர் ஆண்டில் 95 கிலோ கிராம் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுவதாக ஓசேன் கெயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, இத்தாலி, ஒஸ்ட்ரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்தில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து சமஷ்டி சுற்றாடல் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை மிக அதிகளவில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்க்கப்படுவதனால், சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வருடாந்தம் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


via-tamilinfo