Tamil Swiss News

சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில் ஏடிஎம்களில் இருந்து 1.5 மில்லியன் பணம் திருட்டு

சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில் ஏடிஎம்களில் இருந்து 1.5 மில்லியன் பணம் திருட்டு

சுவிட்சர்லர்நதின் Aargau கான்டனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் இதுவரையில் ஏ.ரீ.எம் இயந்திரங்களிலிருந்து 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ.ரீ.எம். இயந்திரங்களை வெடிக்கச் செய்து திருடர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கான்டனின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பணம் களவாடியமை இந்திரங்களுக்கு ஏற்பட்ட சேதம் என்பனவற்றை கணக்கிட்டால் மொத்தமாக 2.16 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்கௌ கான்டனில் அடிக்கடி ஏ.ரீ.எம். இயந்திரத் திருட்டுக்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த ஏ.ரீ.எம். இயந்திரங்களிலிருந்து அதிகளவு பணம் களவாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி கும்பல்களில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மன் வழியாக மோல்டாவா, ரூமெனியா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் கொள்ளையர்கள் அதிகளவில் இவ்வாறான திருட்டுக்களை மேற்கொள்வதாக சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.