சிறந்த கடவுச்சீட்டுக்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஏழாம் இடம்

உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டுக்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஏழாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
109 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வீசா இன்றி எத்தனை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டுக்களின் தரம் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
Henley & Partner நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து ஒன்றியத்தினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
உலகின் 277 நாடுகளில் 186 நாடுகளுக்கு வீசா இன்றி சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு உடையவர்கள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கையானது அமெரிக்கா, நியூசிலாந்து, பெல்ஜியம், நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கு பொருந்துகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 193 நாடுகளுக்கு வீசா இன்றி செல்லக்கூடிய ஜப்பானிய கடவுச்சீட்டு இந்த வரிசையில் முதனிலை வகிக்கின்றது.
via: Tamilinfo