Tamil Swiss News

ரஸ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சேர்ந்தவர் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க வீசா மறுப்பு

ரஸ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சேர்ந்தவர் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க வீசா மறுப்பு

ரஸ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வீசா வழங்கப் போவதில்லை என சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளில் ரஸ்யா ஆக்கிரமித்த பகுதிகள் உள்ளடங்கிய அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வீசா வழங்குவதனை நிறுத்திக் கொண்டுள்ளது.

ரஸ்யா ஆக்கிரமிப்புச் செய்த பகுதிகளில் ரஸ்ய குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கு சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க வீசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ஜோர்ஜிய ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ரஸ்யா சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டுள்ளது.

இவ்வாறு கையகப்படுத்திய மக்களுக்கு ரஸ்ய கடவுச்சீட்டு வழங்குகின்றது.

ரஸ்யாவின் இந்த நடவடிக்கையானது சட்டவிரோதமானது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


Via- TamilInfo