உலக பொருளாதார பின்னடைவுக்கு காரணம் உக்ரைன் - எலொய்ன் பீரெஸ்ட்

உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பானது ஒட்டுமொத்த உலகினையுமே பின்னடையச் செய்துள்ளது என எலொய்ன் பீரெஸ்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஸ்ய போர் காரணமாக காலநிலை மாற்றம், பால்நிலை சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேர்னில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சுவிட்சர்லாந்திற்கான ரஸ்ய தூதுவரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மிக முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் உலகம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை வெற்றிகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.