Tamil Swiss News

வாடகைத் தொகை அதிகரிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது

வாடகைத் தொகை அதிகரிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை அதிகரிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் நாடு முழுவதிலும் வாடகைத் தொகை 2.8 வீதம் உயர்வடைந்துள்ளது.

New Homegate Rental Index நிறுவனத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வினை விடவும் இந்த தொகைகள் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுச் சந்தையில் போதியளவு வாடகை வீடுகள் நிரம்பல் செய்ய முடியாத நிலைமை நீடித்து வருவதனால் இவ்வாறு வாடகை தொகை உயர்வடைந்துள்ளது.

அநேகமான கான்டன்களில் இவ்வாறு வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது.

Graubünden கன்டனில் வாடகைத் தொகை 6.7 வீதத்தினாலும் சூரிச் கான்டனின் வாடகைத் தொகை 6.2 வீதத்தினாலும், Lugano கான்டனின் வாடகைத் தொகை 5.3 வீதத்தினாலும் உயாவடைந்துள்ளது.