Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் 2.2 வீதமாக குறைவடைந்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் 2.2 வீதமாக குறைவடைந்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை 2.2 வீதமாக பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வமாக புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பளங்கள் மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை 3 வீதமாக காணப்பட்டதுடன், கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.2 வீதமாக குறைவடைந்துள்ளது.

எவ்வாறெனினும், சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் சரியான தகுதியான ஆளணி வளத்தை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Via-TamilInfo