சுவிட்சர்லாந்தில் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் டேட்டா சென்டர்கள்

சுவிட்சர்லாந்தில் டேட்டா சென்டர்கள் அல்லது தகவல் நிலையங்கள் அதிகளவில் மின்சார வசதியை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த மின்சாரத் தேவையில் தகவல் நிலையங்கள் சுமார் 4 வீத மின்சாரத்தை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான டேட்டா சென்டர்கள் வியாபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சுமார் 86 தவல் நிலையங்கள் காணப்படுவதாகவும், நெதர்லாந்தில் மட்டுமே இதனை விடவும் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லூசர்ன் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ:ஙான பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் டேட்டா சென்டர்களினால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு இரண்டு மடங்காக உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டில் பண்ணைத் தொழில்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் மின்சார சக்தியை விடவும் கூடுதல் அளவில் இந்த தகவல் நிலையங்கள் மின்சாரம் பயன்படுத்துகின்றன.
பாரியளவில் தகவல்களை திரட்டி வைப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான கணனி மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புக்களுடன் கூடிய நிலையத்தை நாம் தகவல் நிலையம் அல்லது டேட்டா சென்டர் என அழைக்கின்றோம்.
Via-TamilInfo