Tamil Swiss News

சுவிஸில் மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை

சுவிஸில் மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை

சுவிட்சர்லாந்தில் மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பணியாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேவை வழங்குவதில் சிரமங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் மரிடாகினி வைத்தியசாலையில் கடந்த 9ம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.

மருத்துவ பணியாளர்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக இவ்வாறு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இவ்வாறு மருத்துவ பணியாளர்களுக்கான தட்டுப்பாட்டு நிலையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்ந்தும் பதிவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுவிஸ் அவசர சிகிச்சைப் பிரிவு அமைப்பின் தலைவர் வின்சன்ட் ரிபோர்டி தெரிவித்துள்ளார்.

தொழிற்தகமையுடைய ஆளணி வளத்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.


Source: TamilInfo