Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கானோருக்கு காப்புறுதி அட்டைகள் இல்லை!

சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கானோருக்கு காப்புறுதி அட்டைகள் இல்லை!

சுவிட்சர்லாந்தில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு காப்புறுதி அட்டைகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காப்புறுதிக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு பலர் சுகாதார காப்புறுதி திட்டங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

அநேகமானவர்கள் குறைந்த கட்டணத்தை அறவீடு செய்யும் நிறுவனங்களுக்கு மாற்றமடைந்துள்ளனர்.

இதனால் காப்புறுதி அட்டைகளை அச்சிடப்பட்டு உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.

சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் வாடிக்கையாளர்கள் காப்புறுதி நிறுவனங்களை மாற்றுவதனை விடவும் இந்த தடவை அதிகளவில் மாற்றம் இடம்பெற்றுள்ளது.

காப்புறுதி அட்டைகள் இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வது அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காப்புறுதி அட்டைகள் இல்லை என்றால் சுகாதார செலவுகளுக்காக அந்தந்த நாடுகளின் வைத்தியசாலைக்கு நேரடியாக பணம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.