பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது

பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் நன்கொடையாளர் மாநாட்டில் வைத்து இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட பாரியளவிலான வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு இவ்வாறு உதவ உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இக்னேஸியோ காஸீஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மீள்கட்டுமான திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான உதவிகள் வழங்கப்படும் என்பது பற்றிய விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.
ஏற்கனவே 4 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக 5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை நாட்டு மக்கள் வழங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 1700 பேர் கொல்லப்பட்டதுடன், எட்டு மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.