Tamil Swiss News

சீன பயணிகள் மீது சுவிட்சர்லாந்து கட்டுபாடுகள்!

சீன பயணிகள் மீது சுவிட்சர்லாந்து கட்டுபாடுகள்!

சீன விமானப் பயணிகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சுவிட்சர்லாந்து கவனம் செலுத்தி வருகின்றது.

கோவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக பல நாடுகள் சீன விமான பயணிகள் தமது நாடுகளுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் கட்டுபாடுகளை அறிவித்துள்ளன.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறு அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன.

கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையின் அடிப்படையிலேயே சீன விமானப் பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுவிட்சர்லாந்து இதுவரையில் அவ்வாறான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சீன பயணிகள் கட்டாய பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் இணக்கம் வெளியிடவில்லை.

ஜெர்மனி, சுவீடன், பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெய்ன் போன்ற நாடுகள் சீன விமானப் பயணிகளின் வருகை தொடர்பில் கட்டுப்பாடுளை அறிவித்துள்ளன.

எனினும், சுவிட்சர்லாந்து அனைத்து விடயங்களையும் கவனத்திக் கொண்டு ஆராய்ந்து வருகின்றது என்ற போதிலும் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லை.