Tamil Swiss News

வெளிநாட்டுப் பணியாளர்கள் சிறந்த கல்வித்தகமை உடையவர்கள்

வெளிநாட்டுப் பணியாளர்கள் சிறந்த கல்வித்தகமை உடையவர்கள்

வெளிநாட்டுப் பணியாளர்கள் சிறந்த கல்வித் தகமை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் பல்கலைக்கழக பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வித் தகமையை கெண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பணியாளர்களில் 41 வீதமானவர்கள் உயர் கல்வித் தகமை உடையவர்கள் எனவும், சுவிட்சர்லாந்து பணியாளர்களில் 43 வீதமானவர்கள் உயர்கல்வித் தகமை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் ஊழியப்படை தொடர்பில் சுவிட்சர்லாந்து புள்ளிவிபரவியல் திணைக்களம் செய்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் மத்தியில் தொழில் வாய்ப்பு அதிகரிப்பு சாதக நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.