சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் உயர்வு

சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஆண்டில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20 பிராங்குகளாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்தி செலவு உயர்வினால் கட்டணங்களை உயர்த்துவதற்கான அவசியம் எழுந்துள்ளது என சுவிஸ் மின்சார உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2023ம் ஆண்டில் 4500 கிலோவெட் மின்சாரத்தை பயன்படுத்தும் வீடு ஒன்றின் கட்டணம் சராசரியாக 70 பிராங்குகளாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், மின்சார உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேய்ன் – ரஸ்ய போர் எரிபொருள் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், மின்சார உற்பத்தி செலவும் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.