Tamil Swiss News

பண்டைய ரோம போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் சுவிட்சர்லாந்தில் மீட்பு

பண்டைய ரோம போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் சுவிட்சர்லாந்தில் மீட்பு

பண்டைய ரோம போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சுவிட்சர்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


பயிலுனர் ஆகழ்வாராய்ச்சியாளர் ஒருவரினால் இந்த தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


குறுவாள், ஷ்லிங்சாட் கற்கள், நாணயக் குற்றிகள், ஆணிகள், கவசம் உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.


கிறிஸ்துவுக்கு முன் 15 நூற்றாண்டு கால பொருட்களே இவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


லுகாஸ் சிச்மிட் என்ற அகழ்வாராய்ச்சியாளர் இந்த பண்டைய பொருட்களை கண்டு பிடித்துள்ளார்.


சுவிட்சர்லாந்தின் டைபென்காஸ்டல் மற்றும் கவுன்டர் ஆகிய நகரங்களுக்கு அருகாமையில் இந்த புராதன பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மெட்டல் டிடெக்டர்களின் மூலமாக இந்த பண்டைய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சுவிட்சர்லாந்தின் பூர்வகுடிகளான Rhaetian யினருக்கும் ரோமப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது பயன்படுத்தப்பட்டதாகக் நம்பப்படும் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.


இந்த பண்டைய பொருட்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.