Tamil Swiss News

சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இடையில் பேச்சுவார்த்தை!

சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இடையில் பேச்சுவார்த்தை!

சுவிட்சர்லாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மிலின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினை, அமெரிக்க ஜனாதிபதி பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியுடன் தாமும் தமது நிறைவேற்று சபை உறுப்பினர்களும் சந்திப்பு நடாத்த உள்ளதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி பர்மிலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் மிக நெருக்கமான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளினதும் தலைவர்களின் சந்திப்பில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்படும் என்பது பற்றிய நிகழ்ச்சி நிரல் இதுவரையில் வெளியிடப்பவில்லை.