Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் கலாச்சார துறை பணியாளர்கள் தொழில் இழப்பு!

சுவிட்சர்லாந்தில் கலாச்சார துறை பணியாளர்கள் தொழில் இழப்பு!

சுவிட்சர்லாந்தில் கலாச்சாரத்துறையில் பணியாற்றிவர்கள் தொழில்களை இழந்துள்ளதாக மத்திய புள்ளிவிபரவியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் கலாச்சார துறையில் பணிகளில் ஈடுபட்டு வந்த 5 வீதமானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.

ஹோட்டல் மற்றும் தங்குமிடங்கள் சார் துறைகளிலும் இதேவிதமான தொழில் வாய்ப்பு இழப்புக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு கலாச்சாரத்துறையில் 312000 தொழில் வாய்ப்புக்கள் காணப்பட்டதாகவும் 2020ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 298000 மாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கலச்சார துறைசார் நிறுவனங்களுக்கு பல கடந்த ஆண்டில் இயங்குவதற்கான அவகாசம் கிடைக்கப் பெறவில்லை.

குறிப்பாக திரையரங்குகள், மேடைகள், நிகழ்வு அரங்கங்கள் உள்ளிட்டன வழமையான பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

முழு நேரப் பணியாளர்களை விடவும் பகுதி நேர பணியாளர்களே அதிகளவில் இந்த நெருக்கடி நிலைமைகளை வெகுவாக எதிர்நோக்கியுள்ளனர்.

ஆண்களை விடவும் பெண் பணியாளர்களே அதிகளவில் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக சுவிட்சர்லாந்து புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.