Tamil Swiss News

சுவிஸ் மருந்து நிறுவனங்களை பாதிக்கும் அமெரிக்காவின் சட்டம்

சுவிஸ் மருந்து நிறுவனங்களை பாதிக்கும் அமெரிக்காவின் சட்டம்
அமெரிக்காவின் உத்தேச சட்டமானது சுவிட்சர்லாந்து மருந்துப் பொருள் நிறுவனங்களை பாதிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது குறித்து அந்நாட்டு சாங்கிரஸ் சபையில் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சுவிட்சர்லாந்தின் பிரதான மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

உத்தேச சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என்பதனை வலியுறுத்தும் வகையில் சுவிஸ் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் முதனிலை மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு, இந்த சட்டத்தை நிறுத்துவதற்காக பல மில்லியன் டொலர்களை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.