Tamil Swiss News

மே 14, 202, அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் தொற்று எண்ணிக்கை

மே 14, 202, அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் தொற்று எண்ணிக்கை

மே 14, 2021 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 2300 தொற்றுகள் பதிவாகி உள்ளது. 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 6,79,510 ஆ க உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 18,893 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 1,349.5 ஆ க உள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 101 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 28,144 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.


இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 42 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச தகவலின் படி கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10,179 பேர் பலியாகி உள்ளார்கள்.


தனிமைப்படுதலை பொறுத்தவரை 14 மே 2021, 3091 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். 4957 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தக் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 1235 அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமைப் படுத்தலில் உள்ளார்கள்.


புதிதாக 57,422 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 72,73,942 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மே 12, 2021 வெளியான தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை 35,11,492 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 11,84,138 பேருக்கு முழுமையான இரண்டு தடுப்பு மருந்துகளும் போடப்பட்டுள்ளது. இது 100 பேரில் 40.62 பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டதற்கு சமமானது ஆகும், 2021 தரவுகளின் படி சுவிற்சர்லாந்தின் மொத்த சனத்தொகை 87,15,494 ஆகும்.