ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (07.05.21) தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 1,007,469 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன, இது சுவிஸ் உள்ள மக்கள் தொகை 8.6 மில்லியனில் 11.7% ஆகும். மேலும் இதே அளவிலான எண்ணிக்கையிலான மக்கள் முதலாவது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 29 முதல் மே 5 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், சுவிட்சர்லாந்தில் 373,796 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதன்படி சராசரியாக நாளொன்றிற்கு 53,257 பேர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இதற்கு முதல் வாரத்தில் இருந்ததை விட 4% (வீதம்) அதிகரித்து காணப்படுவதை காணக்கூடிதாக இருக்கிறது.
ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து அதன் தடுப்பூசி திட்டத்தை மெதுவாக ஆரம்பித்ததையிட்டு பல விமர்சனங்கள் எழுந்தன. இதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கிடையில் தடுப்பூசிகள் விநியோகிக்கும் விகிதத்தில் பெரிய முரண்பாடுகள் காணப்பட்டன. சுகாதார கட்டுப்பாட்டாளர்கள், சுவிஸ்மெடிக் (Swissmedic), தடுப்பூசிகளை அங்கீகரிக்க மற்ற நாடுகளை விட அதிக காலதாமதம் எடுத்துள்ளனர், மேலும் சில தடுப்பூசிகளை விநியோகிப்பதில் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.
சுவிஸ் மத்திய அரசு ஐந்து நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 36 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை விடுத்தன. Pfizer/BioNTech மற்றும் Moderna விலிருந்து கோவிட் -19 தடுப்பூசிகள் தற்போது பாவனையில் உள்ளன, மேலும் வேறு தடுப்பூசிகளுக்கு பாவனை மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காலதாமதம் எற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (06.04.21) சுவிஸ் மத்திய அரசு 2022 ஆம் ஆண்டில் Moderna விலிருந்து மேலும் ஏழு மில்லியன் டோஸ்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறியது, மேலும் ஏழு மில்லியன் அதிகமாக தேவைப்பபடும் என விருப்பம் தெரிவித்துள்ளது.
“குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் தடுப்பூசி போட 2021 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் போதுமான தடுப்பூசி உள்ளது – சிறுவர்கள், மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் 2022 ஆம் ஆண்டிற்கான போதிய எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகளையும் இது பெற்றுக்கொள்ளகூடியதாகவிருக்கும். இது முழு மக்களுக்கும் மிக உயர்ந்த அளவிலான நோய்த்தடுப்பு பாதுகாப்பை வழங்குகிறது, ”என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.
சமீபத்திய வாரங்களில் கோவிட் தொற்றுநோய் தொற்று வீதம் சற்று குறைந்துகாணப்பட்டாலும், இதுபற்றி நம்பிக்கைக்கு சில காரணங்களை அளிக்கிறது . ஆனால் சுகாதார அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த மாட்டார்கள் என்று கூறுகையில் , சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் புதிய இந்தியன் கோவிட் -19 திரிவுபட்ட தொற்று நோய்பற்றிய அச்சங்கள் எழுந்துள்ளன.
கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தின் நிலைமை
தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களை உறுதிப்படுத்தும் சூழலில் சுவிட்சர்லாந்து தனது கோவிட் -19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ளது. தடுப்பூசி போடும் வீதம் நாளொன்றுக்கு 53,000 வேகமாக உயர்ந்து கொண்டு செல்கின்றது.