ரயில் டிக்கெட்டுகளுக்கு 2022 ல் விலை அதிகரிப்பு இல்லை !

இந்த ஆண்டிற்கு ஏறக்குறைய 2 பில்லியன் பிராங்குகள் பற்றாக்குறை இருந்தபோதிலும், எதிர்வரும் 2022 ம் ஆண்டில் பொது போக்குவரத்துக்கான பயணச் சீட்டுகளின் விலை மாற்றமடையாது ஒரே மாதிரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
250 போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 18 கட்டண சமூகங்களை ஒன்றிணைக்கும் சுவிஸ் பாஸ் கூட்டணி இத் தகவலை உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை சுவிஸ் பெடரல் ரயில்வே (எஸ்.பி.பி / எஸ்.எஃப்.எஃப் / எஃப்.எஃப்.எஸ்) வரவிருக்கும் ஆண்டிற்கான புதிய கால அட்டவணையை வெளியிடும் பாரம்பரிய நாளான டிசம்பர் 12 முதல் சில பிரிவுகளில் விலைகுறைப்பும் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சூப்பர்சேவர் பயணச் சீட்டு வரம்பினை, விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இயணத்தில் பெறும் சில பயணச்சீட்டுக்களுக்கு அதிக தள்ளுபடி விலைக்கழிவினைப் பெற முடியும் என தெரிய வருகிறது.