Tamil Swiss News

வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது பாஸல் நகர்!

வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது பாஸல் நகர்!

சுவிற்சர்லாந்தின் முக்கிய நகரமான பாஸல், வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பாஸல் மாநகரம் பிச்சை எடுப்பவர்களுக்கு வித்தியாசமான ஒரு சலுகையை வழங்கியுள்ளது.


சுவிற்சர்லாந்தில் உள்ள பாஸல் நகர், பிச்சை கேட்பவர்கள், ஐரோப்பாவில் தாங்கள் விரும்பும்  நாட்டிற்கு சென்றுவிடலாம் என்று வவுச்சர் ஒன்றை அளித்துள்ளது. அதற்கு கைமாறாக அவர்கள், சுவிற்சர்லாந்திற்கு இனிமேல் திரும்பி வர மாட்டோம் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்கும் பிச்சை கேட்பவர்களுக்கு ரயில் வவுச்சர்கள், நகரின் குடிவரவு சேவை மற்றும் 20 சுவிஸ் பிராங்க்குகள் வழங்கப்படுகிறது.


அதாவது பிச்சை எடுப்பவர்கள், இந்த வவுச்சரை பெற வேண்டுமென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு சுவிற்சர்லாந்திற்கு திரும்பி வர மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். மேலும் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி சுவிற்சர்லாந்திற்குள் வந்து மாட்டிக்கொண்டால் நாடு கடத்தப்படுவார்கள். இந்நிலையில் தற்போதுவரை சுமார் 31 பேர் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளனர்.