Tamil Swiss News

சுவிற்சர்லாந்தில் ஒன்லைனில் போலி கொரோனா தடுப்பூசிகள்

சுவிற்சர்லாந்தில் ஒன்லைனில் போலி கொரோனா தடுப்பூசிகள்

சுவிற்சர்லாந்தில் ஒன்லைனில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதால், ஒன்லைனில் ஆர்டர் செய்யவேண்டாம் என சுவிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


தடுப்பூசிகள் மருத்துவ ஊழியர் ஒருவரால் தயார் செய்யப்பட்டு செலுத்தப்படும் திரவங்கள்.


அவை சரியான வெப்பநிலையில் பாதுக்கக்கப்படவேண்டும், வெப்பநிலை மாறாத வகையில் வாகனங்களில் அனுப்பப்படவேண்டும்.


ஆகவே, தடுப்பூசிகளை ஒன்லைனில் விற்பது சாத்தியமில்லை என சுவிஸ் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


இனையத்தில் ஏற்கனவே போலி கொரோனா தடுப்பூசிகள் உலாவரத்தொடங்கிவிட்டதாக தெரிவிக்கும் அந்த அமைப்பு, ஒன்லைனில் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக எச்சரித்துள்ளது.


கொரோனா தடுப்புசியின் தேவை அதிகரித்து வருவதை சதகமாக்கிக்கொண்டு, குற்றவாளிகள் மற்றும் சில அமைப்புகள் போலியான கொரோனா தடுப்பூசியை விளம்பரம் செய்துவருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


இப்படி விற்கப்படும் தடுப்பூசிகள் பொதுவாக போலியானவையாகத்தான் உள்ளன. ஆகவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் தங்கள் மருத்துவரையோ அல்லது அதிகாரப்பூர்வ தடுப்பூசி மையத்தையோ மட்டுமே அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.....


மற்றும், சுவிற்சர்லாந்தில் இதுவரை 495,000-க்கும் அதிகமானோர் கோரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 318,000-க்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், 7970 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுவிற்சர்லாந்தின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்த மாத இறுதிக்குள் 3வது கொரோனா தடுப்பு மருந்தை அங்கீகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


சுவிஸ் அரசு கடந்த மாதம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக தயாரித்த தடுப்பூசி மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்தது.


இந்த நிலையில், பிரித்தானிய நிறுவனமான ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ராசெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் சுவிற்சர்லாந்தின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் Swissmedic அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


8.6 மில்லியன் குடிமக்களைக் கொண்ட சுவிஸ், அதன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு 449 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மேலும், சுமார் 15 மில்லியன் டோஸ்களுக்கு ஆர்டர்களைக் கொடுத்துள்ளது.


கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள  விரும்பின் இந்த ஆண்டின் இடைப்பகுதியில் இலவசமாவே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.