Tamil Swiss News

சுவிஸில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்

சுவிஸில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Neunkirch SH பகுதியின் ஹேமிங் வளைவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

45 வயது நபர் ஒருவர் ஓட்டிவந்த கார், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது தீடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது சாலையில் தாறுமாறாக ஓடிய கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்த பொலிசார் உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் 6 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்து ஏற்பட்ட பகுதி Schaffhausen மாகாண எல்லைக்குள் வருவதால் அந்த மாகாண பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.