எகிப்தில் தேவாலயம் மீதான தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாதிகள் தேவாலயத்துக்கு வெளியே வாசலில் கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாக எந்திர துப்பாக்கியால் 150 ரவுண்டுகள் சுட்டனர்.தகவல் அறிந்ததும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் தீவரவாதிகளை நோக்கி சுட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.இதில் 10 பேர் பலியாகினர். அவர்களில் 8 பேர் பொதுமக்கள், 2 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர். அவர்கள் தவிர 8 பேர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதற்கிடையே போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். அதை தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டான்.இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். புத்தாண்டு நிகழ்ச்சியை சீர் குலைக்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எகிப்தில் மைனாரிட்டியாக இருக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து தொடர்ந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் காயம் அடைந்துள்ளனர்....