Tamil Swiss News

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை பிறப்பு சுவிட்சர்லாத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை.!

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை பிறப்பு சுவிட்சர்லாத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை.!

கொரோனா ஊரடங்கு காலம் குழந்தை பிறப்பை சுவிட்சர்லாத்தில் அதிகரிக்க செய்யும் என மருத்துவர்கள் நம்பியிருந்த நிலையில், தற்போது ஏமாற்றமே மிஞ்சியது என கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊரடங்கால் குழந்தை பிறப்பு அதிகரிக்காததன் காரணத்தையும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் சுவிட்சர்லாந்தில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை தொடர்பான விடயங்களை பயன்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் குழு கண்டறிந்துள்ளது.

மட்டுமின்றி குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களைப் பராமரிப்பதும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களைப் பாதுகாப்பதும் தான் எங்கள் முன்னுரிமை என ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஏன் பிறப்பு எண்ணிக்கை சரிவடைந்தது என்பது தொடர்பில் விரிவான ஆய்வறிக்கை ஒன்றை சுவிஸ் மருத்துவ குழுவினர் தயார் செய்துள்ளனர்.

ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவரான David Baud-ன் கூற்றுப்படி, பெருந்தொற்று காலகட்டத்தின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குழந்தை பிறப்பு எண்ணிக்கை பத்து முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மேலும், முந்தைய தொற்றுநோய்களின் காலகட்டத்தில் அதிக கருச்சிதைவுகள் ஏற்பட காரணமாகிவிட்டன, ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கருச்சிதைவுகள் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை என்றார்.

தொற்றுநோய் பரவல் என்பதால், தம்பதிகள் இடையே சந்திப்புகளும் நெருக்கமும் குறைந்தது என கூறும் சுவிஸ் மருத்துவர்கள்,

உளவியல் நெருக்கடியும் பிறப்பு எண்ணிக்கை குறைய முக்கிய காரணிகளில் ஒன்றாக சுட்டிக்காட்டியுள்ளனர்.