Tamil Swiss News

எதற்காக சுவிஸ் நாட்டை ஒரு தீவு என அழைக்கின்றனர்?

எதற்காக சுவிஸ் நாட்டை ஒரு தீவு என அழைக்கின்றனர்?

சுவிஸ் மேற்கு ஐரோப்பாவின் இதயத்தில் இருக்கின்றது. இதை சில வேளைகளில் ஒரு தீவு என்றும் அழைப்பர். இதன்படி அவர்கள் கூறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நடுவே உள்ள ஒரு தீவு என்பதாகும். இது சொந்தத்தில் ஒரு EU உறுப்பினர் அல்ல ஆனால் இதன் அயல்நாடு களாக ஏறத்தாழ அனைத்துமாக உள்ளவை: ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி மற்றும் அவுஸ்திரியா.

சுவிசில் மூன்று ஐரோப்பிய மொழிகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக் கொள்கின்றன: டொச் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகள்.

சுவிஸ் 41,300 km2 பிரதேசத்தைக் கொண்டது என்பதுடன் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது டென்மார்க்கின் அளவுடன் ஒப்பிடக்கூடியது என்பதுடன் அவுஸ்திரியாவுடன் ஒப்பிடும்போது அரைப்பங்கானது.

சுவிசில் 8 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். சுவிசில் 60 வீதத்திற்கு மேலான மக்கள் 20 மற்றும் 64 வயதிற்கு இடைப் பட்டவர்கள். (ஆதாரம்: கணக்கெடுப்புக்கான மத்திய திணைக்களம்- நிலை 2014)