Tamil Swiss News

கொரோனா கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்!

கொரோனா கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்!

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், கொரோனா கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெடரல் அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றிற்குப் பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset, சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்தில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஏப்ரலுக்குப் பிறகு 300 பேர் வரை தொற்றுக்கு ஆளான முதல் முறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் 266 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், 299 பேருக்கு கொரோனா என்று தகவல் வந்தால் என்ன, 311 பேருக்கு கொரோனா என்று தகவல் வந்தால் என்ன, அது ஒரு விடயமே அல்ல என்கிறார் சுகாதாரத்துறையைச் சேர்ந்த Marcel Tanner என்பவர்.

அந்த எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் ஒரு இடத்திலிருந்து வரவில்லை, மொத்த சுவிட்சர்லாந்திலும் எடுக்கப்பட்ட கணக்கின்படிதான் இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த எண்ணிக்கை கவலைப்படுவதற்குரிய எண்ணிக்கை அல்ல என்கிறார் அவர்.