Tamil Swiss News

Migros அருகே கர்ப்பிணி மீது pepper spray தாக்குதல்: மூவர் கைது

Migros அருகே கர்ப்பிணி மீது pepper spray தாக்குதல்: மூவர் கைது

சுவிட்சர்லாந்தில் பல்பொருள் அங்காடி அருகே சமூக விலகல் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே கர்ப்பிணி மீது pepper spray தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பில் மூவரை Aargau மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர். வியாழனன்று பகல் சுமார் 3.30 மணியளவில் Migros அருகே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


கொரோனா அச்சுறுத்தக் இருப்பதால் கர்ப்பிணியான தமது மனைவியின் அருகே இருந்து சமூக விலகல் கடைபிடிக்க இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


ஆனால் 67 வயது நபரும் அவரது மனைவியும் அதை கண்டுகொள்ளாதது மட்டுமின்றி, கைகலப்புக்கும் சென்றுள்ளனர்.


இந்த நிலையில் திடீரென்று அந்த கர்ப்பிணி மீது தொடர்ந்து ஒன்றிரண்டு முறை pepper spray தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


தகவல் அறிந்து விரைந்து வந்த மண்டல பொலிசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மூக்கில் காயமுடன் நின்றிருந்த அந்த 67 வயது நபரையும், தாக்குதலுக்கு இரையான கர்ப்பிணியின் கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மட்டுமின்றி கர்ப்பிணியான அந்த கோஸ்டாரிகா நாட்டவரையும் பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள மண்டல பொலிசார், அந்த 67 வயது நபரையும் அவரது மனைவியையும், தாக்குதலுக்கு இரையான கர்ப்பிணியின் கணவரையும் கைது செய்துள்ளனர்.