சுவிற்சர்லாந்து தமிழ் கல்விச்சேவை பள்ளமடு மக்களுக்கு உலர் உணவு வழங்கியது!

வெளிச்சம் தொண்டு நிறுவனம் ஊடாக சுவிற்சர்லாந்து தமிழ் கல்விச்சேவை பள்ளமடு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேச்செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு கிராமத்தில் வாழ்கின்ற 133 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1650 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிற்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் நாளாந்தம் தொழில் செய்து வாழ்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதனால் இந்த உதவிகள் தேவைப்படுவோராக தாயகத்தில் மக்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டே சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவை தங்களால் இயலுமான உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
*செய்தி:- ர.நிதுர்ஷனா