சவப்பெட்டிகள் இல்லாமல் பைகளில் சுற்றப்பட்டு புதைக்கும் நிலை ஏட்படலாம்: எரியூட்டும் மையங்கள்

சுவிட்சர்லாந்தில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று கூடுதலாக 400 சவப்பெட்டிகளை வரவழைக்க நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவை முன்னெடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி, 21 வயதேயான Kevin Huguenin தெரிவித்துள்ளார்.
இதுவரை தங்கள் நிறுவனம் கொரோனா தொடர்பில் 8 இறுதிச்சடங்குகளை முன்னெடுத்துள்ளதாக கூறும் Kevin Huguenin,
சுய தனிமைப்படுத்தலை சுவிஸ் மக்கள் கடைமையாக எடுத்துக் கொண்டால் அதிக உயிரழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
இருப்பினும் தமது நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாகவும், 400 சவப்பெட்டிகளை வரவழைக்க உள்ளதாகவும்,
பொதுவாக தாங்கள் 40 சவப்பெட்டிகளை மட்டுமே தேவை கருதி இருப்பு வைத்துக் கொள்வது வழக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத்துறை வாயிலாக தங்களுக்கு உரிய வழிகாட்டுதல் கிடைப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு கருவிகள் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும், தாங்களாகவே முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சடலங்களை எரியூட்டும் மையங்களுக்கு என ஒரு அளவுகோல் உண்டு, அதையும் மீறும் நிலை ஏற்பட்டால், சவப்பெட்டிகள் இல்லாமல் பிணங்களுக்கான பைகளில் சுற்றப்பட்டு புதைக்கும் நிலை ஏற்படும் என்றார் கெவின்.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களையும் புதைக்கலாம் என்ற விதி சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ளது என கூறும் கெவின், புதைப்பதா அல்லது எரியூட்டுவதா என்பது உறவினர்களின் முடிவே என்றார்.