சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்ட துருக்கியர்கள்: மீட்க முன்வரவில்லை துருக்கி!

கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்ட துருக்கியர்களை இதுவரை அந்த நாடு மீட்க முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள துருக்கிய தூதரகமும் சொந்த நாட்டு மக்களுக்கு உதவ முன்வராத நிலையில், பயம் மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் துருக்கிய அதிகாரிகள் நம்பிக்கையை மட்டுமே அளித்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
துருக்கி அரசாங்கத்திடம் இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கிருந்து இதுவரை உரிய பதிலேதும் வரவில்லை என்றே சூரிச் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது,
இதனிடையே திரும்பிச் செல்ல முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மட்டும் பல நூறு என்பதால் இந்த சூழலில் விமான பயணமும் கேள்விக்குறியே என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாத பாதியில் இருந்தே சுவிட்சர்லாந்தில் இருங்து விமான சேவைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ள துருக்கி அரசு, இங்கு சிக்கியுள்ள மக்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது.
எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சாலை மார்க்கம் பயணம் மேற்கொள்வதும் கடினம் என தெரிவித்துள்ள துருக்கியர்கள், புதிய விசா ஒன்றை கைப்பற்றுவதும் அதிக தொகை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் வெளிவிவகாரத்துறைக்கும் துருக்கிய மக்களின் இங்குள்ள நிலை தெரியாத நிலையில், துருக்கி அரசு, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே தெரிவித்துள்ளது.