திசினோ மாநிலத்தில் பூங்காக்கள் மற்றும் ஏரியோர நடைபாதைகள் மூடப்படுகின்றன.

திசினோ மாநிலத்தில் லுகானோவில் பூங்காக்கள் மற்றும் ஏரியோர நடைபாதைகள் மூடப்படுகின்றன. லுசோனே என்னும் திசினோ மாநிலத்தின் கிராமத்தில் பொழுதைப்போக்கும் பொது இடங்கள், மகிழூர்தி தரிப்பிடங்கள் மற்றும் லொகார்னோவிற்குரிய மசியா ஏரி ஆகியனவும் மூடப்படுகின்றன.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கமை, மற்றும் ஐந்து பேரிற்கு மேல் இணைந்திருந்தல் போன்ற காரணங்களிற்காக மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குடிமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் லுசோனே கிராமசபை அறிவித்துள்ளது. முக்கியமாக நாய்களை கயிறில் கட்டிச்செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகளை ஏனைய மாநிலங்களும் கடைப்பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா
Source: 20min