Tamil Swiss News

சீனாவிலிருந்து வந்தடைந்த மருத்துவ உபகரணங்கள்: பற்றாக்குறை நீங்கியதா?

சீனாவிலிருந்து வந்தடைந்த மருத்துவ உபகரணங்கள்: பற்றாக்குறை நீங்கியதா?

கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் சுவிட்சர்லாந்து மருத்துவமனைகளுக்கு அவசரமாக தேவைப்பட்ட அத்தியாவசிய உபகரணங்கள் விமானம் மூலம் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவி வரும் நிலையில், மாஸ்குகள், பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை குறித்து சுவிஸ் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், கொண்டு வரப்பட்ட பொருட்களில் அவசரமாக தேவைப்பட்ட பாதுகாப்பு உடைகளின் முதல் டெலிவரி சூரிச் மருத்துவமனைகளுக்கு செய்யப்பட்டது.

இன்னொரு விமானத்தில் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்கள் ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் மேலும் சில விமானங்கள் பொருட்களை கொண்டுவர இருக்கின்றன.

சூரிச்சிற்கு வந்த பாதுகாப்பு உடைகள் ஷாங்காயிலிருந்து அனுப்பப்பட்டவையாகும். அவை, சூரிச் மற்றும் Schwyz மாகாணங்களிலுள்ள 34 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

ஜெனீவா வந்தடைந்த மற்றொரு விமானம், மாஸ்க் உட்பட 92 டன் பாதுகாப்பு உபகரணங்களை சுமந்து வந்திருந்தது.

அதில் 2.5 மில்லியன் மாஸ்குகள், 10 மில்லியன் கையுறைகள் மற்றும் கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் தெர்மாமீற்றர்கள் இருந்தன.

இந்த பொருட்கள் 13 சுவிஸ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தக கூட்டமைப்புகளுக்கு அனுப்பப்படும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரும் நாட்களில் சுவிஸ் சர்வதேச விமான சேவை மூலம் கொண்டுவரப்பட உள்ளது.