Tamil Swiss News

சதாசிவம் லோகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை ஏன்? : உயிரிழப்பின் காரணம் கொறோனா

சதாசிவம் லோகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை ஏன்? : உயிரிழப்பின் காரணம் கொறோனா

சுவிஸில் கடந்த வாரம் 59 வயதான சதாசிவம் லோகநாதன் கொறோனா தொற்றுநோயினால் இறந்துள்ளார். “உயிரிழப்பின் காரணம் கொறோனா என்னும் தொற்றுநோய்” என்று செங்கால்லன் மாநிலத்தின் வழக்கறிஞர் பணிமனை கூறியுள்ளது.

நீரிழிவு நோயின் கடுமையான நோயாளியாக இருந்த போதும் இவரை இறுதி வரை வீட்டில் இருக்குமாறு இவருடைய குடும்ப மருத்துவர் கூறியிருந்தார். “ஏன் என்னுடைய சகோதரத்தை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை?” எனக் கேட்கின்றார் சிவலிங்கம். சரியான கேள்வி தான் என செய்தித்தளம் ரெலே சூரிச் கூறியது.

யார் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, யார் சேர்க்கப்படவில்லை என்பதை றாப்பர்ஸ்வில் மருத்துவ ஆலோசனை மையத்தில் கேட்க முடியும். “இது ஒரு கடினமான முடிவு. மருத்துவமனையில் இடங்கள் நெருக்கடியாக இருப்பதும், கூட்டாட்சியின் விதிமுறைகளுமே காரணம். குறைவான அறிகுறிகள் இருப்பவர்களின் நிலை மோசமாக மாறும் பொழுதே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டிற்கு இன்றெல்லாம் போதுமான இடங்கள் மருத்துவமனையில் இருக்கின்றன. எனினும் ஏன் இந்த நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்பது தெரியவில்லை.” என்கிறார் லிந்தால் மருத்துவ மையத்தின் முதல்வர் கொல்கெர் கேர்ஷ்.

“ஆனால் இப்படி ஓர் மோசமான நிலை தான் லோகநாதனிடம் காணப்பட்டது. என அயல் வீட்டில் வசிப்பவர் கூறுகின்றார். சாதாரணமான இருமல் அல்ல, கடுமையான இருமல் இருக்கின்றது என நான் குடும்ப மருத்துவரிடம் கூறினேன். தான் ஒரு இருமல் பானம் தருவதாக மட்டுமே மருத்துவர் கூறினார்.” என்றும் விபரித்தார் அயல் வீட்டில் வசித்தவரான தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு வரும் எல்பெட் திவ்யகாந்.

கொறோனா நோயாளிக்கு இருமல் பானம் கொடுக்கப்பட்டிருப்பதை குடும்ப மருத்துவரிடம் கேட்ட போது, அவர் எந்த வித பதிலையும் அளிக்க விரும்பவில்லை. மேலும் இது தொடர்பாக அவர்கள் எதையும் கூற விரும்பவில்லை.

அவசர தேவையுள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதை பொது இடத்தில் தெரிவிக்கின்றோமெனவும், இவ்வாறான ஒரு நிலை பிறரிற்கு வந்த விடக்கூடாது என லோகநாதனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா
Translation by Nithurshana Raveendran
Source: Tele Züri (https://www.telezueri.ch/zuerinews/59-jaehriger-corona-patient-stirbt-nach-aerztlicher-fehleinschaetzung-137605243)