ஓரின சேர்க்கையாளர்களுக்கு குழந்தையை தத்தெடுத்து கொள்ள புதியnசட்டம் !

சுவிஸில் ஜனவரி 1ம் திகதி முதல் ஆண் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது துணைக்கு பிறந்த குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்தெடுப்பு குறித்த கடுமையான விதிமுறைகளும் நாட்டில் தளர்த்தப்படவுள்ளது. தற்போது வரை சுவிஸில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.
ஏனென்றால் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனாலும் வெகு காலமாக ஒன்றாக வாழும் ஓரின சேர்க்கையாளர்கள் இனி குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாம்.
இதனால் சுவிஸ் சட்டம், மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுடன் நெருக்கமாக தன்னை இணைத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி ஓரின தம்பதியில் ஒருவருக்கு குழந்தை சொந்தமில்லை என்றாலும் அதை தத்தெடுக்க முடியாது.
அதே போல தத்தெடுக்கும் வயது 28-ஆக பெற்றோருக்கு குறைக்கப்பட்டுள்ளது. குழந்தையை தத்தெடுக்க விரும்பும் ஜோடிகள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஒன்றாக இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
தத்து கொடுக்கப்படும் குழந்தைகள் தங்களுக்கு 18 வயது ஆன பிறகு தான் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.