சுவிஸ்ஸில் கார் விபத்தில் சிக்கி பலியான இளைஞர்!

சுவிட்சர்லாந்தில் கார் விபத்தில் சிக்கி பலியான இளைஞரின் பெற்றோர் உரிய நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.$
சுவிட்சர்லாந்தின் Chur நகரத்தில் கடந்த சனிக்கிழமை 5 இளைஞர்கள் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்சார விநியோக பெட்டி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பின்னிருக்கையில் சக நண்பர்களுடன் அமர்ந்திருந்த அனில் என்ற 17 வயது இளைஞர் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலேயே பலியானார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அனிலின் குடும்பத்தினர், சம்பவத்தன்று அனில் அந்த காரில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்ததே முட்டாள்த்தனம் என்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக தமது மகன் அனிலுடன் எந்த தொடர்பிலும் இல்லாத அந்த இளைஞர் சக நண்பர்களுடன் வந்து அனிலை அழைத்துள்ளார்.
அனிலின் உற்ற நண்பர்கள் சிலர் அந்த காரில் இருந்ததால் அனிலும் புறப்பட்ட தயாரானார். இந்த நிலையில் Haldenstein GR பகுதியில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து சாரதி உள்ளிட்ட அனைவரும் தப்பிய நிலையில் அனிலின் நெருங்கிய நண்பர் மட்டும் சம்பவ இடத்தில் இருந்து தொலைபேசியில் அனைவருக்கும் தகவல் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தங்களை கடுமையாக பாதித்துள்ளது எனக் கூறும் அனிலின் உறவினர்கள், இதுவரை அந்த சாரதியிடம் இருந்தோ இல்லை அவரது பெற்றோரிடம் இருந்தோ ஒரு ஆறுதல் வார்த்தை கூட வரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி அனிலின் இறுதிச்சடங்குக்கு குறித்த குடும்பத்தினர் பங்கேற்காமல் இருந்ததே நல்லது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிசார் உரிய விசாரணை மேற்கொண்டு தங்கள் மகனுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.