சுவிட்சர்லந்தில் கடந்த வாரம் முதல் மர்ம காய்ச்சல்!

சுவிட்சர்லந்தில் கடந்த வாரம் முதல் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் வாரத்தில் பரவி வரும் இந்த மர்ம காய்ச்சலால் மத்திய சுவிட்சர்லாந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக Geneva, Neuchâtel, Vaud மற்றும் Valais மாகாண மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒருவித வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த காய்ச்சல், 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை குறி வைத்து தாக்கி வருவதால் மக்கள் அனைவரும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 1000 நபர்களுக்கு தலா 17 நபர்கள் இந்த வைரஸ் தொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது, இதன்படி 100,000 நபர்களுக்கு 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவலாக இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் பொதுமக்கள் அனைவரும் பதற்றம் அடையாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் படி அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.