Tamil Swiss News

சுவிஸ் கடிகாரச் சந்தைக்கு சவால் விடுக்கும் ஆப்பிள் கடிகாரங்கள்

சுவிஸ் கடிகாரச் சந்தைக்கு சவால் விடுக்கும் ஆப்பிள் கடிகாரங்கள்

வாட்ச் தயாரிப்பில் ஜாம்பவான்களான சுவிஸ் வாட்ச் சந்தைக்கே சவால் விடுமளவில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அணிந்திருப்பவரின் இதய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் திறன் படைத்த புதிய ஆப்பிள் நிறுவன வாட்ச் ஒன்று சுவிஸ் வாட்ச் நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அதை அணிந்திருப்பவரின் சீரற்ற இதயத் துடிப்பைக் கண்டறிந்து, ஒரு ECG என்னும் இதயதுடிப்பு அறிக்கையை உருவாக்கி, அசாதாரண இதயத் துடிப்பு இருந்தால், தானாகவே மருத்துவமனைக்கு ஒரு அவசர அழைப்பை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாட்ச் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ஆப்பிள் நிறுவனமானது, புதிய தொழில் நுட்பங்களுடன், 2017இல் மட்டும் 24 மில்லியன் வாட்சுகளை விற்பனை செய்துள்ள சுவிஸ் வாட்ச் நிறுவனங்களை விற்பனையில் நெருங்கிவிடும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே சுவிஸ் வாட்சுகளின் ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது.

அதே நேரத்தில் ஆப்பிள் வாட்சுகள் தொடர்ந்து கூடுதல் தொழில்நுட்பங்களுடன் முன்னேறி வருகின்றன.

இது சுவிஸ் வாட்ச் நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஆரம்ப விலை 399 டொலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


(Image: apple.com)