Tamil Swiss News

சுவிஸ் இளைஞர்களில் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய்!

சுவிஸ் இளைஞர்களில் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய்!

சுவிட்சர்லாந்தில் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில், பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய் இருப்பதாக, முக்கிய இரு மருத்துவ பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன்னே மற்றும் சூரிச் நகரங்களில் செயல்பட்டுவரும் இரு முக்கிய மருத்துவ பல்கலைக்கழங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

24 வயது முதல் 26 வயது வரையான சுமார் 7,142 இளைஞர்களிடம் முக்கியமான கேள்வி ஒன்றை இந்த ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்டது.

சுவிஸ் இளைஞர்களிடத்தில் டேட்டிங் செயலிகள், ஆபாச உரையாடல்கள் என சமகால தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சராசரியாக பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் முதல் பாலியல் உறவை 17 வயதுக்குள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற 93 விழுக்காட்டினர் கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதாகவும், சிலர் ஆணுறை பயன்படுத்திக் கொண்டதாகவும், பெரும்பாலானோர் தற்போது ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் இளைஞர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான முறையை கையாண்டாலும் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய் இருப்பதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி முதன் முறையாக பாலியல் உறவு வைத்துக் கொண்ட சுமார் 45 விழுக்காடு இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தங்களை HIV சோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர்.

குறித்த ஆய்வில் டேட்டிங் செயலிகள் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவிஸ் இளைஞர்களில் 62 சதவிகித ஆண்களும் 44 சதவிகித பெண்களும் டேட்டிங் செயலிகள் பயன்படுத்தி வருவதுடன், 48 சதவிகித ஆண்களும் 43 சதவிகித பெண்களும் டேட்டிங் செயலிகள் வாயிலாக தங்கள் இணைகளை தேடிக் கொண்டதும், இதில் 35 சதவிகித ஆண்களும் 22 சதவிகித பெண்களும் டேட்டிங் செயலிகளில் அறிமுகமானவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஆண்களைவிடவும் பெண்களே இணையம் வாயிலான பாலியல் உறவுக்கு நாட்டம் தெரிவித்துள்ளதும், அதாவது 53 சதவிகித பெண்கள், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.