Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்.

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்.

சுவிட்சர்லாந்தில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் 4.9 விழுக்காடு என தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பில் பொருளாதார விவகாரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் மட்டும் 2.4 விழுக்காடு இருந்ததாகவும், இது ஆரோக்கியமாக சூழல் எனவும் பதிவு செய்திருந்தது.

அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதம் சுமார் 106,000 நபர்கள் வேலை இன்றி இருந்ததாகவும்,

மட்டுமின்றி கடந்த 12 மாதத்தில் சுமார் 28,000 பேர் வேலையில் நுழைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்யிட்டுள்ள அறிக்கையில் சுவிட்சர்லாந்தின் வேலையின்மை விகிதம் என்பது 2.4 அல்ல 4.9 என தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனியில் வேலையின்மை விகிதமானது 3.5 விழுக்காடு எனவும் பிரித்தானியாவில் இது 4.1 எனவும் தெரியவந்துள்ளது.