சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் பால்வினை நோய்!

சுவிட்சர்லாந்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் தொற்றும் பால்வினை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறைக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் சுமார் 600 பாலியல் தொழிலாளர்களை மருத்துவ ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதிர வைக்கும் முடிவுகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதில் பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் கோனோரியா, கிளமீடியா மற்றும் சிபிலிஸ் உள்ளிட்ட நோய்களுடன் நடமாடுவது தெரியவந்துள்ளது.
தொற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள பெண் உரிய சிகிச்சை எடுப்பதை தவிர்த்தால் அது அவரது குடும்ப உறுப்பினர்களையும், பொதுமக்களையும் சிக்கலில் ஆழ்த்தும் எனவும் மருத்துவர்கள் குழு அச்சம் வெளியிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்கள் மிக சுலபமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில் அரசு வசதிகள் செய்து தர வேண்டும் எனவும்,தேவைப்பட்டால் நிதி உதவியும் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று St. Gallen மாகாண மருத்துவமனை மருத்துவர் Pietro Vernazza கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் தொழிலாளர்கள் ஆண்டுக்கு இருமுறையேனும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தங்களை உட்படுத்தினால் சுவிட்சர்லாந்தில் பால்வினை நோயை அடியோடு கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.