Tamil Swiss News

போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் 1.9 பில்லியன் பிராங்குகள் இழப்பு : சுவிஸ்

போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் 1.9 பில்லியன் பிராங்குகள் இழப்பு : சுவிஸ்

கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் சுமார் 1.9 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்பு என்பது சுமார் 1.9 பில்லியன் பிராங்குகள் என தெரிய வந்துள்ளது.

இது கடந்த 2010 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 7 விழுக்காடு அதிகம் எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.


போக்குவரத்து நெரிசல் காரணமாக நேர விரயமும் 14% அதிகரித்துள்ளது. மட்டுமின்றி காலநிலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 12% அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் எரிபொருளுக்காக செலவிடும் தொகையானது சுமார் 6% சரிவை கண்டுள்ளது. மட்டுமின்றி விபத்து தொடர்பான வருவாய் இழப்புகளும் சுமார் 8 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.


நாட்டின் உள்கட்டுமானத்தில் உரிய கவனம் செலுத்தினால் இதுபோன்ற வருவாய் இழப்புகளை தவிற்க முடியும் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அலுவகங்களிலும் பாடசாலைகளிலும் பணி நேரத்தை மாற்றியமைப்பதன் மூலம் சிறந்த தீர்வை எட்ட முடியும் எனவும் அரசு கருதுகிறது.


மட்டுமின்றி வாகங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பு அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது.


(Image: handelszeitung.ch)