பாலியல் குற்றச்சாட்டு; பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகினார்!

சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் யானிக் பட்டட் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாடுகளை ஒப்புக்கொண்டு அவர் பதவி விலகியுள்ளார்.
சுவிஸின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் யானிக் பட்டட். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து மருத்துவ ஓய்வு பெற்றிருந்த அவர் மீது சமீபத்தில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
அவரின் முன்னாள் காதலி மற்றும் உடன் பணிபுரியும் சக ஊழியர் உள்ளிட்ட பெண்கள், பட்டட் தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தந்து வருவதாக புகார் அளித்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் பட்டட் தங்களுக்கும் பாலியல் தொந்தரவுகளை தந்ததாக பத்திரிக்கைத் துறை மற்றும் அரசியலில் ஈடுபட்டு வரும் பெண்கள் சிலரும் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது கட்சி பதவியை இராஜினாமா செய்த பட்டட் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பேசிய பட்டட்டின் வழக்கறிஞர் Andreas Meili, யானிக் பட்டட் சமீப காலமாக மது பழக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றம் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு ஈடுபடவில்லை என கூறியுள்ளார்,
இந்நிலையில் இதுகுறித்து பட்டட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குடும்ப சூழல் காரண்மாகவே பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவே ராஜினாமா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன்.
மேலும் என் புகைப்படத்தை நானே கண்டறிய முடியாத சூழ்நிலையில் என் உடல்நலம் உள்ளது, ஆகையால் முதலில் எனக்கு தேவை சிகிச்சை தான். குற்ற வழக்கின் காரணமாக பதவியை இராஜினாமா செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.