Tamil Swiss News

குற்றங்களைக் கண்டுபிடிக்க தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக் கேட்கும் சுவிட்சர்லாந்து

குற்றங்களைக் கண்டுபிடிக்க தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக் கேட்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து காவல்துறையினர் குற்றங்களை கண்டுபிடிக்க தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக் கேட்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் கொள்ளை குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக அதிகமான தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் காவல்துறையினர் தீவிரவாத குற்றங்களுக்கு அவற்றை அந்த அளவிற்கு பயன்படுத்துவதில்லை.


கடந்த ஆண்டு 2,844 அழைப்புகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும், 1,353 திருட்டு குற்றங்களுக்காகவும் 287 அழைப்புகள் இதர குற்றங்களுக்காகவும் ஒட்டுக்கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


கொலைக் குற்றங்கள் மற்றும் மனிதக்கடத்தல் தொடர்பான குற்றங்களைவிட சொத்து தொடர்பான குற்றங்கள் மற்றும் மோசடி தொடர்பான குற்றங்களுக்காக அதிக தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டன.


இந்த புள்ளிவிவரங்களைக் கண்ட சில அரசியல்வாதிகள், பொலிசார் தபால் மற்றும் இதர தொலைதொடர்பு சாதனங்களையும் சோதிக்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஒன்று இணைய வசதி கொண்ட தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கிறது.


இச்சட்டத்தின்படி Facebook அல்லது Swisscom போன்றவையும்கூட சுவிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


இதற்கிடையில் இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள், இச்சட்டம் தரவுத்தகவல் மீறல்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் நாடு ஒரு நாட்டாமை போல் செயல்படும் நிலை உருவாகலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.