Tamil Swiss News

சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கும் காலகட்டத்திற்கு முடிவு

சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கும் காலகட்டத்திற்கு முடிவு

குற்றவாளிகளும் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பவர்களும் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கும் காலகட்டத்திற்கு முடிவு வர இருக்கிறது.


ஒரு பக்கம் சட்ட விரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு, மறுபக்கம் முழுமையான சட்டப்பூர்வ சேமிப்பு என இரண்டு காரணங்களுக்காகவும் ரகசியமாக சேமிப்புக் கணக்குகள் வைத்துக் கொள்வதற்கு புகழ்பெற்றது சுவிஸ் வங்கிகள்.


தற்போது சுவிட்சர்லாந்து அதிகரித்துவரும் அழுத்தங்களால் சர்வதேச தர நிலைகளுக்கு கீழ்ப்படியும் வகையில் தனது வங்கிக் கணக்கு விவரங்களை பிற நாடுகளின் வரி அதிகார அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.


நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


அதேபோல் சுவிட்சர்லாந்தும் தகவல்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளது, இந்த தகவல்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளுடன் 2018 முதல் பகிர்ந்து கொள்ளப்படும்.


முன்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுடன் மட்டுமே அதுவும் விண்ணப்பத்தின்பேரில் மட்டுமே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் இனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாடுகளுடன் தானாகவே ஆண்டுக்கு ஒரு முறை தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.


வரி தொடர்பான விடயங்களுக்காக மட்டுமே தகவல்கள் பகிரப்படும் எனவும் மற்றபடி பொதுமக்களுக்கு தகவல்கள் அளிக்கப்படாது என்தையும் சுவிஸ் அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.


ஏற்கனவே சுவிஸ் வங்கிகள்அமெரிக்க வாடிக்கையாளர்கள் சிலருக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு 5.5 பில்லியன் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.