இரகசிய இராணுவ ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவிலை: பாதுகாப்பு அமைச்சகம்

ஒரு இரகசிய பனிப்போர் கால இராணுவப் பிரிவினுடன் தொடர்புடைய காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவிலை என்று சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது, மேலும் அவற்றைத் தேடுவதை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
"அனைத்து ஆவணங்களையும் மத்திய ஆவணகாப்பகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Renato Kalbermatten SRF இடம் தெரிவித்தார்.
“Projekt 26” அல்லது P-26 என்று அழைக்கப்பட்ட இந்த இரகசிய இராணுவ பிரிவு, 1950களில் கம்யூனிச ஆக்கிரமிப்பை எதிர்த்து ஒரு கெரில்லா பாணியிலான படையை சுவிஸ் இராணுவம் உருவாக்கிய நிகழ்வுடன் தொடர்புடையதாக இருந்தது. 1990 இல் இந்த P-26 கலைக்கப்பட்டது.
தேசிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுகின்ற கட்டுப்பாட்டு பிரதிநிதி, பாதுகாப்பு அமைச்சகத்தால் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற P-26 பற்றிய விசாரணை தொடர்புடைய 27 வெளியிடப்படாத கோப்புறைகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை என்று அதன் ஆண்டு அறிக்கையில் கவலை தெரிவித்திருந்தது. இந்த விசாரணை ‘Cornu’ அறிக்கை என அறியப்பட்டது.
நேட்டோ (வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உள்ள சுவிட்சர்லாந்தின் உறவுகள் இடையே தேவையில்லாத பிரச்சனைகள் நிகழாமல் இருக்க இந்த தர்மசங்கடமான விவரங்களை மறைக்கும் நோக்கில் ஆவணங்களை அழித்துவிட்டதாக அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் Claude Janiak, இந்த வசந்த காலத்தில் பாராளுமன்றத்தில் காணாமல் போன ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று தேடும் குழு தீர்மானித்துள்ளதாக கூறினார். இப்போது அரசாங்கம் அதன் தேடலை நிறுத்திவிட்டதால், வரும் மே மாதத்தில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை கட்டுப்பாட்டுக் குழு முடிவு செய்யும், என அவர் சுவிஸ் செய்தி நிறுவனம் SDA-ATS இடம் கூறினார்.
கூட்டாட்சி கவுன்சில் கடந்த வாரம் Cornu அறிக்கையின் திருத்தப்பட்ட மற்றும் அநாமதேயப்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது. முழு பதிப்பு மத்திய ஆவணகாப்பகங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(Image: www.swissinfo.ch)