வரலாறு படைத்த சந்தேகத்திற்கு உரிய பணமோசடி புகார்கள்..!

2017 ம் ஆண்டு, CHF16 பில்லியன் ($ 16.2 பில்லியன்) மதிப்புள்ள பண மோசடி புகார்கள் சுவிஸ் பண மோசடி கண்காணிப்புக் குழுவினரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்த ஏஜென்சி கடந்த வெள்ளியன்று தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து பணமோசடி அறிக்கை அலுவலகம் (MROS) கிட்டத்தட்ட 4,700 சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அறிக்கைகள் (SARs) பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது, இது 2016 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,909 அதிகமாகும்.
"இரண்டு ஆண்டுகளில், SAR களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகி உள்ளது. 2017 ஆம் ஆண்டில், MROS நாள் ஒன்றுக்கு சராசரியாக 18 புகார்களைப் பெற்றது, அதாவது முந்தைய ஆண்டில் இருந்ததைவிட 60% அதிகம்," என்று அது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு 3,653 வழக்குகள் அனுப்பப்பட்டன, இது மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 65% ஆகும்.
"மூன்று மடங்குக்கு மேல், SAR களில் சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு CHF16 பில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது 2017 ல் மிகவும் வியக்கத்தக்க வளர்ச்சி ஆகும். இருப்பினும், CHF7 பில்லியன் மதிப்பில் ஒரே ஒரு வழக்கு தான் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தது தொடர்பான சந்தேகத்திற்குரிய வழக்குகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 51 ஆக இருந்தன. இருப்பினும், இது ஒரு நிலையான போக்காக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டது, "இந்த குற்றத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் SAR க்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் மாறும்." இதில் நிலையாக இருப்பது, விசாரணை அதிகாரிகளுக்கு மாற்றிவிடப்பட்ட ஏறத்தாழ 33 சதவீத வழக்குகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)