பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டும் சுவிட்சர்லாந்து..!

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான போரில் சுவிட்சர்லாந்தின் பொறுப்புகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சர் Simoneta Sommaruga கூறியுள்ளார்.
ஏனெனில் சுவிட்சர்லாந்து ஒரு உலகளாவிய திறந்தவெளி நிதி மையமாக விளங்குகிறது, இது சில கடமைகளை கொண்டுவருகிறது, என பாரிஸில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட Sommaruga தெரிவித்தார்.
இஸ்லாமிய அரசு (IS) மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவிக்கு எதிராக இரண்டு நாள் மாநாடு பிரெஞ்சு தலைநகரில் நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 70 நாடுகளிலிருந்து அமைச்சர்களும், 500 வல்லுநர்களும் பங்கேற்றனர். இது பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனால் ஏற்பாடு செய்யப்பட்டது. பயங்கரவாதப் போராட்டத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான முயற்சிகளை ஆதரிக்க உறுதியளிக்கும் ஒரு கூட்டு அறிக்கையுடன் இந்த மாநாடு கடந்த வியாழக்கிழமை நிறைவுற்றது.
இந்த விஷயத்தில் சுவிட்சர்லாந்து என்ன செய்கிறது என்பதைப் பற்றி பேசுவதற்காக Sommaruga இந்தக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் 'நாம் எந்தெந்த இடங்களில் இன்னும் சிறப்பாக செயல்படலாம்' என்பதையும் அவர் குறிப்பிட்டார். "வழக்கறிஞர்கள் மற்றும் பிற நிதி சாராத இடைத்தரகர்கள் வழியாக சந்தேகத்திற்கிடமான நிதி பரிமாற்றங்களை கண்டறிவதை மேம்படுத்துவது என்பதை ஓர் உதாரணமாக அவர் மேற்கோளிட்டார்.
"பயங்கரவாததிற்கான நிதி வங்கிகள் வழியாக மட்டும் செல்லவில்லை," என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாட்டில் அவர் கோடிட்டுக் காட்டினார்.
சுவிச்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டிருக்கும் பன்னாட்டு மூலப்பொருட்கள் நிறுவனங்களிலிருந்து வெளிப்படைத்தன்மைக்கு சுவிட்சர்லாந்து அழைப்புவிடுத்துள்ளது. இதில் புகழுக்கான ஆபத்தும் உள்ளது, என Sommaruga கூறினார்.
இந்த நிறுவனங்கள், அவர்கள் மூலப்பொருட்களை பிரித்தெடுக்கும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களுக்கு பணம் செலுத்துவதில் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும், என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பயங்கரவாதப் போராட்டத்திற்கு நிதியளிப்பதற்காக கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படும் ஆபத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். "அபாயங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும், மேலும் பொதுவான விதிகள் வரையறுக்கப்பட வேண்டும்" என்று Sommaruga விளக்கினார்.
(Image: www.swissinfo.ch)